சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று மதிப்பெண் பட்டியல் வினியோகம் செய்யப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியா னது. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளி லும், தனித் தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் இன்று மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படுகின்றன. முதல் முறையாக இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படுகின்றன. அதில் 12 வகையான மறைமுக குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு 25ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்றும் நாளையும் ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் ஹால்டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள் அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் ஹால்டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக