கடலூர், ஜூன் 20: கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தில் 22-ம் தேதி முதல் மேலும் இரு ரயில்கள் நின்றுச் செல்லும் என கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.÷அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை - நாகூர் விரைவு ரயில், திருப்பதி - மதுரை விரைவு ரயில் ஆகிய இரு ரயில்கள் 22-ம் தேதி முதல் கடலூர் துறைமுகம் சந்திப்பில் நின்றுச் செல்லும் செய்தி ரயில்வே ஆணையத்திடம் இருந்து வந்துள்ளது.÷இதை மகிழ்ச்சியுடன் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக