சனி, 16 ஜூன், 2012

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் நைப் பின் அப்துல் அஸீஸ் மரணம்!

ஜித்தா:சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் பொறுப்பை வகித்தவருமான நாஇஃப் பின் அப்துல் அஸீஸ் அல் ஸவுத் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 78 ஆகும்.
விடுமுறையை கொண்டாடுவதற்காகவும், மருத்துவப் பரிசோதனைகளை செய்துகொள்வதற்காகவும் நாஇஃப் கடந்த மாத இறுதியில் அமெரிக்கா சென்றார்.

கடந்த ஜூன் 3 அன்று இளவரசர் உடல்நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் நாடு திரும்புவார் என்றும் சவுதி அரசு அறிவித்திருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக