ஞாயிறு, 17 ஜூன், 2012

ஸ்மார்ட் கார்டு வடிவில் மாணவர்களுக்கு அடுத்தவாரம் இலவச பஸ் பாஸ்

சென்னை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது. இதனால் வெகு தூரத்தில் இருந்து பள்ளிகளுக்கு செல்லும் ஏழை மாணவர்கள் பயடைந்து வருகின்றனர்.

இதுவரை சென்னையில் மட்டும் ஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது  இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து போக்குவரத்து உயர் அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிகளை சென்னை தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

 இதுவரை சென்னையில் மட்டும்தான் ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் கிராமப்புற மாணவர்களும் பயன் அடையும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது     இதனால் இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு 32 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 35 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு பஸ் பாஸ் வழங்கப்பட உள்ளது. இன்னும் 1 வாரத்தில் இலவச பஸ் பாஸ்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக