ரியாத்:சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி கிடையாது. அந்த நாட்டு பெண்கள் தங்களுக்கும் கார் ஓட்ட அனுமதி வழங்கவேண்டும் என போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். எனவே, அதற்கான உரிமை வழங்கக்கோரி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீசிடம் 600 பெண் கள் மனு கொடுத்துள்ளனர்.சட்ட விதிமுறைகளை மீறுவது எங்கள் நோக்கம் அல்ல. உலக பெண்களை போன்று நாங்களும் கார் ஓட்டி மகிழவேண்டும். எனவே, எங்கள் உரிமையை கேட்டுதான் மன்னரிடம் மனு கொடுத்துள்ளோம் என மனால் அல்- ஷெரீப் என்பவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் கார் ஓட்டுவதற்கான உரிமை கோரும் போராட்டத்தை கடந்த ஆண்டு முதன் முதலாக இண்டர்நெட்டில் தொடங்கி வைத்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக