சனி, 16 ஜூன், 2012

பரங்கிப்பேட்டை அருகே கடையில் ஓட்டை பிரித்து திருட முயன்ற சிறுவன் கைது 2 பேருக்கு வலை

பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.முட்லூர் தீர்த்தாம்பாளையம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் கந்தசாமி. சம்பவத்தன்று இரவு இவர் கடையில் படுத்திருந்த போது மர்ம நபர் ஒருவர் பெட்டிக்கடையின் ஓட்டை பிரித்து கடைக்குள் இறங்கி திருட முயற்சித்துள்ளார். அப்போது கந்தசாமி கண் விழித்து விட்டார். அவர் உள்ளே இறங்கிய நபரை மடக்கிப் பிடித்து பரங்கிப்பேட்டை போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் பிடிபட்ட ஆசாமி வில்லிய நல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் தேவகிருஷ்ணன்(14) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், வில்லியநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சிவக்குமார்(18), கார்த்தி(17) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து பரங்கிப்பேட்டை போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து தேவகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக