கடலூர்:கடலூர் மத்திய சிறையில் கைதிகள் அறையில் இருந்து மூன்று மொபைல் போன்கள், இரண்டு
சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.கடலூர் மத்திய சிறையில் மொபைல் போன்கள்
பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று மதியம் 2 மணிக்கு ஜெயிலர் அன்சர்
பாஷா, உதவி ஜெயிலர் மணி மற்றும் சிறை காவலர்கள், கைதிகள் அறைகளில் சோதனை
மேற்கொண்டனர். அப்போது, சிறையில் 4ம் எண் பிளாக்கில் மூன்று மொபைல் போன்கள் மற்றும்
இரண்டு சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.சிறையில் 4ம் எண் பிளாக்கில் 40க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளதால் கைப்பற்றப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்தியவர்கள் யார் என்பது குறித்தும், மொபைல் போனில் இருந்து யாருடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்பது குறித்தும் சிறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக