புதன், 27 ஜூன், 2012

சிதம்பரம் புறவழிச் சாலையில் வேகத்தடை: ஏ.எஸ்.பி., ஆய்வு

சிதம்பரம் புறவழிச்சாலையில் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில் அப்பகுதியில் அமைக்கப்படும் வேகத்தடை குறித்து ஏ.எஸ்.பி., ஆய்வு செய்தார்.
சிதம்பரம் அடுத்த வண்டிக்கேட்டில் இருந்து அ.மண்டபம்,சி.முட்லூர் வழியாக பி.முட்லூர் வரை சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சாலையை அகலப்படுத்தி புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் போக்குவரத்திற்கு அனுமதிக்காத நிலையில் லாரி, கார் மற்றும் டிராவல்ஸ் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகளவில் செல்
கிறது.

இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக இருப்பதுடன் அதிகளவில் விபத்து ஏற்படுகிறது. பெருகி வரும் விபத்தை தடுக்கும் வகையில் வண்டிகேட்டில் இருந்து பி.முட்லூர் தீத்தாம்பாளையம் வரை சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.இதற்கிடையே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி, வண்டிகேட் பகுதியில் வேகத்தடை அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நேற்று துவங்கப்பட்டது. இப்பணியை சிதம்பரம் ஏ.எஸ்.பி., துரை நேரில் ஆய்வு செய்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக