பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ். பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி பரிமளா, 27; இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பரிமளா தூக்கு போட்டு மர்மமான முறையில் இறந்தார். தகவலறிந்து வந்த பரிமளாவின் தாய் வீட்டினர் பிரச்னை செய்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தகவலறிந்த ஏ.எஸ்.பி., துரை, இன்ஸ்பெக்டர் அறிவானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து பரிமளாவின் மாமா சுப்ரமணியன் பரங்கிப்பேட்டை போலீசில், பரிமளா பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்ததாக தெரிவித்தனர். ஆனால் இங்கு வந்து பார்த்த போது தூக்கு போட்டு இறந்ததாக கூறுகின்றனர். பரிமளா சாவிற்கு அவரது கணவர் ரமேஷ், மாமனார் கலியபெருமாள், ரமேஷின் சகோதரர் சிவசங்கர், அண்ணி சந்தோஷம் ஆகிய நான்கு பேர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் குமாரராஜா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். பரிமளாவிற்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளே ஆகியிருப்பதால் வரதட்சணை கொடுமையா என ஆர்.டி.ஓ., விசாரித்து வருகிறார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக