ரியாத்:வரலாற்றில் முதன் முறையாக ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க பெண்களுக்கு சவூதி அரேபியா அரசு அனுமதி அளித்துள்ளது. சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை இது ஒரு மைல் கல் ஆகும்.
அதிகாரப்பூர்வ போட்டிகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டிருந்த சவூதி அரேபியா பெண்களுக்கு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது அந்நாட்டில் சர்ச்சையை கிளப்பும் என கருதப்படுகிறது.
ஒலிம்பிக்ஸ் போட்டி விரைவில் துவங்கவிருக்கும் வேளையில் ஒரேயொரு பெண் மட்டுமே சவூதி அரேபியாவில் இருந்து தகுதிப் பெற்றுள்ளார். குதிரையோட்ட பந்தயத்தில் போட்டியிடும் ஸல்மா ருஷ்தி என்பவர் தாம் அப்பெண்மணி.
இதுத்தொடர்பாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் இவ்வாறு தெரிவித்துள்ளன: “ஒலிம்பிக் கமிஷன் தான் தகுதி பெற்றவர்களின் பங்களிப்பை குறித்து தீர்மானிக்க வேண்டும். இதர பெண்களின் முன்பும் இந்த வாசல் திறந்துள்ளது. அவர்களின் உடலை மறைக்கும் வகையிலான ஆடை அணிந்தே அவர்கள் போட்டிகளில் பங்கேற்பார்கள்” என கூறுகின்றன.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக