புதன், 27 ஜூன், 2012

பரங்கிப்பேட்டை சப்ஜெயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 ஆண்டுகளாக கண்டு கொள்ளாத அவலம்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை சப் ஜெயில் மதிற்சுவர் கீழே விழுந்து ஐந்து ஆண்டுகளாக அப்படியே கிடப்பதால் பாதுகாப்பின்றி உள்ளது.பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் எதிரில் மாஜிஸ்திரேட் கோர்ட், சப்ஜெயில், போலீஸ் ஸ்டேஷன் ஆகியவைகளை உள்ளடக்கிய மதிற்சுவர் உள்ளது. இதனால் மூன்று இடங்களுக்கும் பாதுகாப்பானதாக இருந்து வந்தது.
கடந்த 2007ம் ஆண்டு ஏற்பட்ட மழையின் போது சப் ஜெயிலின் பின்பக்கம் உள்ள மதிற்சுவர் 50 அடி தூரத்திற்கு விழுந்தது. இதனால் சப் ஜெயிலுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. சுவர் இல்லாததால் சப் ஜெயில் கால்நடைகளின் ஓய்விடமாக மாறி வருகிறது.இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக சப்ஜெயில் பாதுகாப்பு இல்லாமல் இருந்து வருகிறது.சப் ஜெயிலுக்கு புதியதாக மதிற்சுவர் அமைக்க வேண்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக