கடலூர்,: திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு பயணிகள் ரயில் என்ஜின் தடம் புரண்டது.
மயிலாடுதுறையில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்ட பயணிகள் ரயில், இரவு சுமார் 7.45 மணியளவில் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தது. ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் காரணமாக ரயில் என்ஜின் தடம் புரண்டது. ரயிலில் நூற்றுக்கணக்கான பயணிகள் இருந்தனர். ரயில் நிலையம் நெருங்கிவிட்டதால் ரயில் மெதுவாக வந்துகொண்டிருந்தது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் தீவிரமாக ஈடுபட்டனர்.
ரயில் என்ஜின் தடம் புரண்டதால், அதே தண்டவாளத்தில் பின்னால் வந்த திருச்செந்தூர் மற்றும் மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக