சனி, 23 ஜூன், 2012

பரங்கிப்பேட்டையில் இரு வேறு வழக்குகளில் 4 பேர் கைது


பரங்கிப்பேட்டை,ஜுன் 23 : பரங்கிப்பேட்டையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை மாதாக்கோவில் தெருவில் கஞ்சா விற்பதாக ஏ.எஸ்.பி., துரைக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் துரைசிங்கம், குமாரராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பாண்டியனை, 31, கைது செய்தனர். அவரிடமிருந்து 12 பாக்கெட்டுகளில் 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றும் பரங்கிப்பேட்டை கலிமா நகரில் காசு வைத்து சூதாடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பணம் வைத்து சூதாடிய சின்னூர் தெற்கு பகுதியை சேர்ந்த லோகம், 28; ஆதி என்கிற ஆறுமுகம், 30; டில்லிசாகிப் தர்கா தெரு ஷேக் 54, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 புள்ளிதாள்கள், 150 ரூபாய் கைப்பற்றின

0 கருத்துகள்:

கருத்துரையிடுக