பரங்கிப்பேட்டை: மனித நேய இலவச கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச
கல்விச் சேவையை செய்து வரும் கா.மு.கவுஸ் தனது 25 ஆண்டு கால இலவச சேவையை நிறைவு
செய்துள்ளார். ஏழை எளியோரின் இலவச போதகர் என்பது முதல் போலி கவுரம் பார்ப்பவர்
என்று வரை தன்மீது விழும் நிறை குறை விமர்சனங்களுக்கெல்லாம் செவி சாய்க்காத இவர்
தனது கல்வி சேவையில் தொடர்ந்து விடாபிடியாக இருந்து இலவச கல்வி மையத்தை
நடத்திவருகிறார்.
ஏழை எளிய மாணவ மாணவிகளுகக்கு தினமும் இலவச கல்வி போதிக்கும்
இவருடைய கல்வி அறக்கட்டளையின் 26-வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, டாக்டர்
கதிரேசன் அறக்கட்டளை சார்பில் கா.மு. கவுஸின் இலவச கல்வி அறக்கட்டளையில் டியுஷன்
படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
நன்றி: mypno.com









0 கருத்துகள்:
கருத்துரையிடுக