கடலூர் : புதுச்சேரி வழியாக சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு ரயில் பயணிகள் நலச் சங்க சிறுப்பு ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் சிவராமன் தலைமையில் நடந்தது. பொதுச் செயலர் நிஜாமுதீன் வரவேற்றார்.
அருள்செல்வம், திருநாவுக்கரசு, பாலசுப்பிர மணியன், தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கையை ஏற்று நாகூர்- பெங்களூரு; மன்னார்குடி-திருப்பதி; எழும்பூர்-காரைக்கால் வழித் தடங் களில் மீண்டும் ரயில் இயக்க நடவடிக்கை எடுத்தது போன்று நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கடலூர்-புதுச்சேரி-மரக்காணம்- மகாபலிபுரம் வழியாக சென்னைக்கு ரயில் பாதை திட்டத்தை இந்த நிதியாண்டில் செயல்படுத்த க ரயில்வே நிலைக் குழு உறுப்பினர் டி.ஆர். பாலு, எம்.பி., அழகிரியிடம் வலியுறுத்துவது.
கடலூர் துறைமுகம் ரயில்வே ஸ்டேஷனில் சைக்கிள் ஸ்டேண்ட் அமைக்க வேண்டும்.
திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் குடிநீர், கழிவறை மற்றும் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். குப்பன்குளம் பகுதி மக்கள் ரயில் பாதையை கடந்து செல்ல நடைமேடை வசதி ஏற்படுத்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக