சிதம்பரம் : சிதம்பரம்- கடலூர் சாலையில் நடக்கும் விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நிரந்தரமாக தடுப்பு கட்டை அமைக்க வேண்டும்.
சிதம்பரத்தில் இருந்து கடலூர் சாலையில் பஸ்கள், கனரக வாகனங்கள், கார், வேன் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. சிதம்பரத்தில் உலக புகழ் பெற்ற நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையம் இருப்பதால் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் இந்த சாலை வழியாக அதிகளவில் வந்து செல்கின்றனர்.
விபத்தில்லா நாளே இல்லை
தஞ்சாவூர், நாகப்பட்டிணம் மாவட்டங்களுக்கு இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும். இதனால் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து எப்போதும் பிசியாகவே இருக்கும். சாலை வளைவுகள் அதிகம் இருப்பதால் விபத்துகள் நடக்காத நாட்களே கிடையாது என்ற அளவிற்கு தினமும் விபத்துகள் நடந்து வருகிறது.
அதிக வளைவுகள்
ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டில் இருந்து சிதம்பரம் நகரம் வரும் வரை கீரப்பாளையம், புவனகிரி திருவள்ளூவர் நகர் அருகே, ஆதிவராகநல்லூர், கொட்டாப்புலிச்சாவடி, பு.முட்லூர் தீர்த்தாம்பாளையம், எம்.ஜி.ஆர்., சாலை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு சாலையோரம் வளைவுகள் அதிகம் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. அதே போன்று பு.முட்லூரில் இருந்து சிதம்பரம் செல்லும் புற வழிச் சாலையிலும் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.
பேரி கார்டுகள்
ஒரே இடத்தில் தொடர்ந்து விபத்துகள் நடக்கும் இடங்களில் போலீஸ் நிலையம் சார்பில் அந்த பகுதியை சேர்ந்த முக்கிய புள்ளிகளை பிடித்து பேரிகார்டுகள் தயார் செய்து வைக்கப்படுகிறது.
இதனால் ஓரளவு விபத்துகள் கட்டுப்படுத்தப்பட்டாலும் பேரிகார்டுகளை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் போதையில் வேண்டும் என்றே வேறு இடத்தில் தள்ளிவிட்டுச் சென்று விடுகின்றனர்.
அதிவேகமாக செல்லும் லாரிகள் பேரிகார்டுகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் மோதி தூக்கி எரிந்து விட்டு செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
இதனால் பல இடங்களில் பேரிகார்டுகள் நசுங்கி சாலையோரங்களில் கிடப்பது வேதனையாக உள்ளது.விபத்துகளை தடுக்க பேரிகார்டுகளை செய்து கொடுத்தும் சில சமூக விரோதிகள் அலட்சியப்படுத்தி பேரிகார்டுகளை தள்ளிவிடுவதுதான் வேதனையாக உள்ளது.

நிரந்த தடுப்பு கட்டை
விலை மதிக்க முடியாத உயிர்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்லும் சாலை, பு.முட்லூரில் இருந்து சிதம்பரம் புறவழிச் சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடக்கும் இடங்களை தேர்வு செய்து நிரந்தர தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக