கடலூர்: டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணியினை கடலூரில் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ வீடு வீடாக விழிப்புணர்வு நோட்டீஸ்களை விநியோகித்தார்.கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் கடலூர் புதுப்பாளையம் ரெட்டைபிள்ளையார் நகர் குடிசை பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ வீடு வீடாகசென்று ஆய்வு செய்தார். அப்போது வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமலும் பழைய பொருட்கள் இல்லாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும் எனக்கூறி விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வீடு வீடாக விநியோகம் செய்தார்.
அப்போது சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை இணை இயக்குநர் டாக்டர் வனஜா, கடலூர் சுகாதாரப்பணி துணை இயக்குநர் டாக்டர் சம்பத் நகராட்சி ஆணையர் விஜயகுமார், மாவட்ட மலேரியா அலுவலர் கஜபதி, விரிவாக்க கல்வியாளர் சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர். ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கூறும்போது, தனி நபர் வீடுகளில் இடங்களில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு, டெங்கு சிக்கன் குன்யா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை வளர விடாமல் தடுத்து ஆரம்பத்திலேயே அதனை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திறந்த வெளியில் தூக்கி எறியப்படும் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், உடைந்த மண்பானைகள், டீ கப்புகள், என அனைத்து விதமான கொள்கலன்களில் பெருமளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. தேவையற்ற பொருட்கள் தண்ணீர் தேங்குவதை தவிர்ப்பதன் மூலமும் சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிக்காப்பதன் மூலமாகவும் டெங்கு காய்ச்சல் வருவதை தவிர்க்கலாம். இவ்வாறு கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் அனைத்துதுறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் ஆட்சியர் பங்கேற்றார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக