புதன், 20 ஜூன், 2012

பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்தில் 4 வீடுகள் சாம்பல்

 பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை வண்ணாரபாளையம் செட்டிகுளத் தெருவை சேர்ந்தவர் கோபால். இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டார்.
இவரது மனைவியும் வீட்டில் இல்லை. அப்போது திடீரென இவரது வீடு தீப்பிடித்தது. பின்னர் தீ பரவி அருகில் இருந்த கோபாலின் தம்பி ஜெயராமன், கஜேந்திரன் ஆகியோரது வீடுகளுக்கும் பரவியது. தனவேல் என்பவரது வீடும் தீக்கிரையானது.
இதுபற்றிய தகவலறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் 4 வீடுகளும் எரிந்து சாம்பலானது.
இதில் அரிசி மூட்டைகள், பாத்திரங்கள், துணிகள், டிவி, கிரைண்டர், கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்து பொருள்களும் எரிந்து நாசமானது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும். தீ விபத்து குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தைல மரங்கள் எரிந்து நாசம்:
அண்ணாமலைநகர் முத்தையாநகரில் வசித்து வருபவர் அரவிந்தன்(65). ஓய்வு பெற்ற பொறியாளர். கிள்ளை எடப்பாளையம் பகுதியில் உள்ள இவரது சொந்தமான தைல மர தோப்பு தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தார்கள்.
இதற்குள் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்த தைல மரங்கள் எரிந்து நாசமானது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக