வியாழன், 21 ஜூன், 2012

மராட்டிய தலைமைச் செயலக கட்டிடத்தில் திடீர் தீ விபத்து

மராட்டிய தலைமைச் செயலக கட்டிடத்தில் திடீர் தீ விபத்துமும்பை:மகாரஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மந்திராலயா கட்டிடத்தின் நான்காவது தளத்தில் அம்மாநில தலைமை செயலகம் அமைந்துள்ளது. 6-வது தளத்தில் முதலமைச்சர் அலுவலகமும் துணை முதல்வர் அலுவலகமும் உள்ளது.

இந்நிலையில் இக்கட்டிடத்தின் நான்காவது தளத்தில் பாபன்ரோவ் பச்பூட் என்கிற அமைச்சரின் அலுவலக அறையில் திடீரென தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென அத்தளத்தின் அடுத்தடுத்த அறைகளிலும் பரவியது. பற்றி எரிந்த தீ 6-வது தளம் வரையிலும் வேகமாக பரவியது.

தகவலறிந்ததும் தீயை அணைக்க 25 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தீ தொடர்ந்து பரவுவதையடுத்து 4-வது தளத்தில் பணிபுரிந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் 30 பேர் அக்கட்டிடத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் நகர மேம்பாட்டு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில்தான் ஆதர்ஷ் ஊழல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக