சிதம்பரம்: சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டதில் பயணிகல் 12 பேர் காயமடைந்தனர்.காட்டுமன்னார்கோவிலில் இருந்து சிதம்பரம் நோக்கி நேற்று காலை வந்த தனியார் பஸ், சிதம்பரம் ஓமக்குளம் புறவழிச்சாலையை கடக்க முயன்றது. அப்போது புவனகிரியிலிருந்து சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது. இதில் பயணம் செய்த ஜம்புலிங்கம் (58), முத்தமிழ் (25), சுந்தர்ராஜன் (50), அருண் (30), அம்புஜம் (50), ராகவன் (35), பிரம்மராஜன் (40), சித்ரா (35), பிரியங்கா (14) உள்ளிட்ட 12பேர் காயமடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புறவழிச்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன. புறவழிச்சாலை சந்திப்புகளில் பேரிகார்டுகளை வைத்து அதிவேக மாக வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்தை தடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக