வெள்ளி, 22 ஜூன், 2012

ஷாக் அடிக்கும் கரன்ட் பில் : ரூ,1500 கட்டியவர்களுக்கு ரூ,3500 ஆக உயர்வு

புதிய மின் கட்டண பில்லை கண்டு அனைத்து தரப்பினரும் ஷாக் அடித்தது போல் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் மின்கட்டண உயர்வு கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் மாதம் மத்தியில் மின் அளவு குறிப்பிடப்பட்ட நுகர்வோருக்கு பழைய மற்றும் புதிய கட்டணங்கள் கலந்து இருந்ததால் உயர்த்தப்பட்ட கட்டணம் சற்று அதிகமாக தெரிந்தது.

அதே நபர்களுக்கு ஏப்ரல் 3ம் வாரத்தில் இருந்து ஜூன் 3ம் வரையிலான மின் பயனீட்டு அளவை தற்போது மின் ஊழியர்கள் வீடுவீடாக சென்று புதிய கட்டணத்தையும் குறித்து கொடுக்கின்றனர். அந்த கட்டணத்தை கண்ட பலருக்கு ஷாக் அடித்துள்ளது.தோராயமாக 1500 ரூபாய் மின் கட்டணம் கட்டி வந்தவருக்கு புதிய கட்டணப்படி ஸீ3500 என பில் வந்துள்ளது. மாதம் சராசரியாக ரூ,350 முதல் ரூ,400க்குள் கரன்ட் பில் வந்தவருக்கு ஆயிரத்து 40 ரூபாய் பில் ஆகியுள்ளது.

கடுமையாக உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தின் சுயரூபத்தை இப்போதுதான் உணர்வதால், ஏழை, நடுத்தர மக்கள் மட்டுமன்றி வசதி படைத்தவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்களில் ஒருவர் கூறுகையில், ‘‘வாடகை வீட்டில் வசிக்கும் எனக்கு 4 மடங்கு மின் கட்டணம் வந்துள்ளது. எனது நண்பர்கள் சிலருக்கு வீட்டு வாடகையைவிட மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது’’ என்றார்

மின்தடை காரணமாக முழுமையாக மின்சாரத்தை அனுபவிக்காமலேயே இந்த அளவு மின் கட்டணம் வந்துள்ளதால் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கினால் இன்னும் மின்கட்டணம் அதிகரிக்குமே என பலர் அஞ்சுகின்றனர். காம்பவுண்ட் வீடுகள் கட்டி ஒரே மின் மீட்டரை பொருத்தியுள்ள சிலருக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணம் வந்துள்ளது. இதனால் பலர் வீட்டு வாடகையை உயர்த்தி விட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக