கோடையின் உச்சமான அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் கடந்த மூன்று நாட்களாக கடலூர் மாவட்ட மக்களை வாட்டி வதைக்கிறது.கடலூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே சரியான பருவமழை பெய்யவில்லை. ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்பில்லை. நிலத்தடி நீரும் நாளுக்கு நாள் வேகமாகக் குறைந்துவருகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் புயல் தாக்கியதில் கடலூர் மாவட்டத்தில் இருந்த 80 சதவீத மரங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன.
இதனால் இந்த ஆண்டு கோடை வெயிலின் கொடுமையை கடலூர் மாவட்ட மக்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு அனுபவிக்கின்றனர். காலையிலேயே சூரியன் தனது உக்கிரத்தை காட்ட தொடங்கிவிடுகிறது. இதனால் சாலையில் நடந்து செல்வதும், இருசக்கர வாகனத்தில் பயணிப்பதும் மிக கடினமாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பகல் பொழுதில் மட்டுமல்லாது இரவிலும் வீட்டினுல்கூட இருக்க முடியாத அளவுக்கு புழுக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது. கடலூர் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில நாட்களாக 106 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கிறது.
கத்திரி வெயிலின் எஞ்சியுள்ள நாட்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக