செவ்வாய், 22 மே, 2012

+2 தேர்வு முடிவுகள்: பரங்கிப்பேட்டை பள்ளிகளின் நிலவரம்

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிந்தன. 5,557 பள்ளிகளை சேர்ந்த 8.22 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 6 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 7 ஆயிரத்து 969 பேர் மாணவிகள். தனித்தேர்வர்களாக 61 ஆயிரத்து 319 பேர் தேர்வு எழுதினர். மாணவ,மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியானது.

இதில் பரங்கிப்பேட்டை பள்ளிகளின் தேர்ச்சி நிலவரமாவது...

சேவாமந்திர் பெண்கள் பள்ளி 100%

மூனா ஆஸ்திரேலியன் மேல் நிலைப்பள்ளி 100%

கலிமா மேல் நிலைப்பள்ளி 76%

அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி 76%

அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி 44%

வழக்கம்போல் இந்தமுறையும் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி கடைசி இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளனர். வருடா வருடம் தேர்ச்சி வீதம் குறைந்துக் கொண்டே இருந்தும் அதை பற்றி அக்கறை இல்லாமல் இருப்பதையே இந்த வருட தேர்ச்சி விகிதமும் காட்டுகிறது.

கூடுதல் தகவலாக மூனா ஆஸ்திரேலியன் மேல் நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவிகளின் விவரம்:

1)M மெஹர் ஸல்மா 945

2)A கதீஜா ருபைய்யா 933

3)A தவ்லத்துன்னிசா 880

 நன்றி: mypno.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக