இந்திய ரூபாய் மதிப்பு, இன்று காலை வணிகம் தொடங்கிய சிறிது நேரத்தில் இன்னுமொரு பாதாளத்தைக் கண்டது. அமெரிக்க டாலருக்கு இணையான இதன் மதிப்பு இன்று மேலும் 43 காசுகள் வீழ்ச்சி கண்டு, இதுவரையில்லாத குறைந்தபட்ச மதிப்பான 55 ரூபாய் 82 காசுகளை எட்டியது. எண்ணெய் நிறுவனங்களும், பிற இறக்குமதியாளர்களும் அதிக அளவில் டாலர்களை வாங்கிக் குவிக்கும் முயற்சியில் இறங்கியதே இதற்கு காரணமாகச் சொல்ப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் பொருளாதார அச்சம்…. சரிவுடன் தொடங்கிய ஆசிய பங்குசந்தைகள் போன்றவை இறக்குமதியாளர்களிடையே ஏற்படுத்தியிருக்கும் அச்ச உணர்வால், இந்திய ரூபாய் மதிப்பு மட்டுமின்றி, மற்ற பலநாட்டு நாணயங்களின் மதிப்பும் இன்று சரிந்துள்ளது. எனினும், வர்த்தகத்துக்கு இடையே மீண்டும் ரூபாய் மதிப்பு மீளத் தொடங்கியுள்ளது. காலை 10.30 வாக்கில் இது 55 ரூபாய் 75 காசுகள் என்ற நிலைக்கு திரும்பியுள்ளதுபுதன், 23 மே, 2012
தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ரூபாய்
இந்திய ரூபாய் மதிப்பு, இன்று காலை வணிகம் தொடங்கிய சிறிது நேரத்தில் இன்னுமொரு பாதாளத்தைக் கண்டது. அமெரிக்க டாலருக்கு இணையான இதன் மதிப்பு இன்று மேலும் 43 காசுகள் வீழ்ச்சி கண்டு, இதுவரையில்லாத குறைந்தபட்ச மதிப்பான 55 ரூபாய் 82 காசுகளை எட்டியது. எண்ணெய் நிறுவனங்களும், பிற இறக்குமதியாளர்களும் அதிக அளவில் டாலர்களை வாங்கிக் குவிக்கும் முயற்சியில் இறங்கியதே இதற்கு காரணமாகச் சொல்ப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் பொருளாதார அச்சம்…. சரிவுடன் தொடங்கிய ஆசிய பங்குசந்தைகள் போன்றவை இறக்குமதியாளர்களிடையே ஏற்படுத்தியிருக்கும் அச்ச உணர்வால், இந்திய ரூபாய் மதிப்பு மட்டுமின்றி, மற்ற பலநாட்டு நாணயங்களின் மதிப்பும் இன்று சரிந்துள்ளது. எனினும், வர்த்தகத்துக்கு இடையே மீண்டும் ரூபாய் மதிப்பு மீளத் தொடங்கியுள்ளது. காலை 10.30 வாக்கில் இது 55 ரூபாய் 75 காசுகள் என்ற நிலைக்கு திரும்பியுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)








0 கருத்துகள்:
கருத்துரையிடுக