வெளிநாட்டு வாழ் இந்தியர் நலனுக்காக
கேரளா போன்ற மாநிலங்களிலும், மைய அரசிலும் தனி அமைச்சரவையும், துறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளதைப் போலவே தமிழகத்திலும் ஏற்படுத்தவேண்டும் என்று வெளிநாடுவாழ்
தமிழர் சங்கங்கள் மூலமாக கடந்த ஆட்சிக் காலத்திலிருந்து தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.குறிப்பாக, குவைத் தமிழ்ச்சங்கம், தமாம் முத்தமிழ்ச்சங்கம், ரியாத் தமிழ்ச்சங்கம் போன்றவை இக்கோரிக்கையை விடுத்திருந்தன.
இந்நிலையில் வெளிநாடுகளில் பணிபுரியச் செல்லும் இந்தியர்கள், குறிப்பாக, தமிழர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக வரும் செய்திகள் அண்மைக் காலங்களில் அதிகமாகி வருவதன் எதிரொலியாக தமிழக அரசு வெளிநாட்டு வாழ் தமிழர் நலனுக்காக தனி ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது.
இந்த ஆணையம்
ஆணையர்
வெளிநாடு வாழ் தமிழர் மீட்பு நல ஆணையம்
சேப்பாக்கம், சென்னை -5
என்ற முகவரியில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக