வியாழன், 3 மே, 2012

இந்தியாவில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் ஆற்றின் மீது ஓடுதளம்: அடுத்த மாதம் திறப்பு விழா


இந்தியாவில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் ஆற்றின் மீது ஓடுதளம்: அடுத்த மாதம் திறப்பு விழாசென்னை விமான நிலையம் கடந்த 5 ஆண்டுகளாக அதிக அளவில் பயணிகள் பயன்படுத்துவதால் ரெயில் நிலையங்கள் பஸ் நிலையம் போல் நெரிசல் நிறைந்த பகுதியாக உள்ளது.
ரெயில், பஸ்கள் ஆகியவற்றில் செல்வதால் நேரம் அதிகமாகிறது. தற்போது பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் குறைவாக இருப்பதால் ரெயிலில் டிக்கெட் கிடைப்பது சிரமமாக உள்ளதால் வெளிநாடு இன்றி உள்நாட்டிற்கும் அதிக அளவில் பயணிகள் விமான போக்குவரத்தை விரும்புகின்றனர்.
விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை வரவேற்கவும், வழியனுப்பவும் உறவினர்களும் அதிகமாக வருவதால் விமான நிலையம் நெரிசல் மிகுந்த பகுதியாக மாறிவிட்டது. இந்தியாவில் டெல்லி, மும்பை ஆகிய நகரங்களுக்கு அடுத்த படியாக பரபரப்பு மிகுந்த விமான நிலையமாக சென்னை உருவாகி உள்ளது. இதனால் விரிவாக்கம் செய்ய மத்திய விமான போக்குவரத்து துறை திட்டமிட்டது. இதற்காக விமான நிலையத்தை சுற்றி உள்ள கெருகம்பாக்கம், மணப்பாக்கம், கொளப்பாக்கம், தாரப்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள 1069 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்க ஒப்புதல் வழங்கியது.
மேலும் விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 2-வது ஒடுதளம், பன்னாட்டு, உள்நாட்டு முனையங்கள், கார்கோ, அடுக்குமாடி கார் நிறுத்த மிடம் உள்பட மேம்படுத்தல் பணியை கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முனையங்களின் முகப்புகள் நவீன வசதிகளுடன் கூடிய வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வாகனங்கள் மேல் தளத்தில் சென்று அப்படியே வெளியே செல்லும் வகையில் பாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
பெருந்தலைவர் காமராஜர் உள்நாட்டு விமான முனையத்தில் தற்போது 19250 சதுர அடி உள்ளது. தற்போது கூடுதலாக 67700 சதுர மீட்டர் விரிவாக்கம் செய்யப்படுகிறது. உள்நாட்டு முனையத்திற்கு தற்போது ஆண்டுக்கு 6 மில்லயன் பயணிகள் வருகின்றனர். விரிவாக்கத்தில் முலம் கூடுதலாக 10 மில்லியன் பயணிகள் வருவதற்கான வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. 'பீக் அவர்' நேரத்தில் 2 ஆயிரம் பயணிகள் செல்கின்றனர். தற்போது கூடுதலாக 3300 பயணிகள் 'பீக் அவர்' நேரத்தில் உள்நாட்டு முனையத்தை பயன்படுத்தும் வகையில் சீரமைக்கப்படுகிறது. உள் நாட்டு முனையத்தில் 3 ஏரோ பிரிட்ஜ் உள்ளது. கூடுதலாக 6 ஏர்ரோ பிரிட்ஜ்கள் கட்டப்படுகின்றன.
உள்நாட்டு முனையத்தில் செக் இன் மையங்கள் 58 உள்ளன. பயணிகள் வசதிகளை மேம்படுத்த 7 இ-டிக்கெட்டு மையத்துடன் கூடுதலாக 62 செக் இன் மையம் அமைக்கப்பட்ட உள்ளது. உடமைகள் எடுக்க 3 கன்வேயர் பெல்ட் உள்ளது. தற்போது கூடுதலாக 6 கன்வேயர் பெல்ட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அண்ணா பன்னாட்டு முனையத்தில் தற்போது 42300 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. விரிவாக்கத்தில் 59300 சதுரஅடி பரப்பளவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. பன்னாட்டு முனையத்தில் தற்போது ஆண்டுக்கு 3 மில்லயன் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
விரிவாக்கத்தில் மூலம் கூடுதலாக 4 மில்லயன் பயணிகள் பயன்படுத்த முடியும். பன்னாட்டு முனையத்தில் 'பீக் அவர்' நேரத்தில் 2150 பயணிகள் செல்லமுடியும். இதை விரிவாக்கத்தின் முலம் கூடுதலாக 2300 பேர் பயன்படுத்த அபிவிருத்தி செய்யபட்டு உள்ளது. பன்னாட்டு முனையத்தில் 5 ஏர்ரோ பிரிட்ஜ்கள் உள்ளன. மேலும் 6 ஏர்ரோ பிரிட்ஜ்கள் கட்டப்பட்டு வருகின்றன. பன்னாட்டு முனையத்தில் தற்போது 42 செக் இன் மையம் உள்ளது. 5 இ-டிக்கெட்டுடன் கூடிய 72 செக் இன் மையம் கூடுதலாக அமைக்கப்படுகிறது.
பன்னாட்டு முனையத்தில் தற்போது 4 கன்வேயர் பெல்ட் உள்ளது. இதை 8 ஆக அதிகரிக்கப்படுகிறது. உள்நாட்டு முனையத்தில் இருந்து பன்னாட்டு முனை யத்திற்கும் பன்னாட்டு முனயைத்தில் இருந்து உள்நாட்டு முனையத்திற்கும் பயணிகள் எளிதாக செல்ல கூடிய வகையில் குழாய் வடிவிலான நடைபாதை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கபட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டு உள்ள குழாய் வடிவிலான இந்த நடைபாதை தரையில் இருந்து 25 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நடைபாதை முழுவதும் குளிர்சாதன வசதியுடன் இருக்கும். வருகிற 2012 ஜனவரி மாதம் இந்த பணி முடிவடையும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. விமான நிலைய 2-வது ஒடுதள பாதை 126 ஏக்கர் நில பரப்பில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஒடுபாதை 3115 மீட்டர் கொண்டதாகும். 2-வது ஒடுதளம் ஆற்றின் மீது செல்லும் வகையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 2-வது ஒடுதளத்தில் 81 பார்கிங் பே அமைக்கப்பட உள்ளன. அடையாறு ஆற்றின் மேல் 447 மீட்டர் நிளத்திற்கு 200 மீட்டர் அகலத்திற்கு ஒடுதளம் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. அடையாறு ஆற்றின் பாலத்தில் செல்லும் ஒடுபாதை மழை, வெள்ளம் ஏற்பட்டாலும் பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த 2-வது ஒடுதளம் ரூ.212 கோடி செலவில் கட்டுப்பட்டு உள்ளது. ஆற்றின் மேல் அமைக்கப்பட்டு உள்ள ஒடுபாதையில் ஏ380 ரக போன்ற பெரிய விமானங்கள் வந்து செல்ல கூடிய வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஒடுபாதை பணிகள் முடிந்து இருந்தாலும் பயன்படுத்த முடியாமல் உள்ளது.
 
கெருகம்பாக்கம், மணப்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் மொபைல் டவர்கள் இருப்பதால் விமானங்கள் தரையிறங்கவும், பறக்கவும் முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதை அகற்றிட தமிழக அரசுக்கு விமான நிலைய ஆணையகம் கோரிக்கை விடுத்து உள்ளது. சென்னை வான் எல்லையில் செல்லும் விமானங்கள் மட்டுமின்றி தென்னிந்தியாவில் உள்ள விமான நிலையங்களிலும் உள்ள விமானங்களை கண்காணிக்க நவீன ரேடர்கள் செயல்படுத்தப்படுகிறது. விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் பணிகள் முடிவடையும் வகையில் உள்ளது. இதனால் கடந்த 3 தினங்களுக்கு முன் மும்பையில் இருந்து சென்னை வந்த விமானம் புதிய முனையத்தில் நிறுத்தப்பட்டது, உள்நாட்டு முனையத்தில் பணிகள் நிறைவு பெற்று உள்ளதால் ஜீன் மாத முதல் வாரத்தில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக