திங்கள், 14 மே, 2012

7வது நாளாக ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம்: 14 சர்வதேச விமான சேவைகள் ரத்து

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் விமானிகள் இன்று 7வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விமானிகளின் போராட்டத்தால் 14 சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ட்ரீம்லைனர் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சி கொடுப்பது தொடர்பான விவகாரத்தில் ஏர் இந்தியா நிர்வாகத்துக்கும், விமானிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தியன் ஏர்லைன்ஸில் இருந்த விமானிகளுக்கு முதலில் பயிற்சி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதால் ஏர் இந்தியா விமானிகள் அதிருப்தி அடைந்திருந்தனர். இதைத் தொடர்ந்து விமானிகள் உடல் நலக் குறைவு என்று கூறி ஒட்டுமொத்தமாக விடுப்பில் சென்றுவிட்டனர்.

கடந்த ஒருவாரகாலமாக நீடித்து வரும் விமானிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் நாள்தோறும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. விமானங்கள் ரத்தாவதால் ஒவ்வொருநாளும் பயணிகள் பரிதவித்துப் போகின்றனர்.

இந்த விவகாரம் பிரதமர் வரை சென்றும் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவில்லை. எற்கனவே 15ம் தேதி வரை முன்பதிவையும் நிறுத்தி வைத்திருந்தனர். தொடர்ந்து முன்பதிவு செய்யப்படுமா என்ற விவரமும் தெரியாததால் பயணிகள் பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று 14 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக