சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் சென்னையில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைநீரை தேக்கி வைக்கவும், கடல்நீர் உட்புகாமல் தடுக்கவும் ரூ.1,560 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ள சிறப்பு திட்டம் குறித்து தங்களது அறிவிப்புக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன். தொடர்ந்து இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வரும் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்திற்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையும். தங்களது அறிவிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான டெல்டா மாவட்ட பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்கள் காவிரி பாசனப்பகுதியின் அங்கமாகும். டெல்டா மாவட்டங்களில் ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் இந்த வட்டங்களுக்கு தொடர்ந்து வருவது நீண்டகால வரலாறு. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்கள் இடம்பெறாதது இப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் வருத்தத்தையும் வேதனையும் அளித்துள்ளது. ஆகையால் தாங்கள் இந்த இருவட்டங்களையும் சிறப்பு திட்டத்தில் சேர்க்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஞாயிறு, 13 மே, 2012
கடல்நீர் உட்புகாமல் தடுக்கும் திட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களை சேர்க்க கோரிக்கை
சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் சென்னையில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைநீரை தேக்கி வைக்கவும், கடல்நீர் உட்புகாமல் தடுக்கவும் ரூ.1,560 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ள சிறப்பு திட்டம் குறித்து தங்களது அறிவிப்புக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன். தொடர்ந்து இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வரும் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்திற்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையும். தங்களது அறிவிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான டெல்டா மாவட்ட பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்கள் காவிரி பாசனப்பகுதியின் அங்கமாகும். டெல்டா மாவட்டங்களில் ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் இந்த வட்டங்களுக்கு தொடர்ந்து வருவது நீண்டகால வரலாறு. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்கள் இடம்பெறாதது இப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் வருத்தத்தையும் வேதனையும் அளித்துள்ளது. ஆகையால் தாங்கள் இந்த இருவட்டங்களையும் சிறப்பு திட்டத்தில் சேர்க்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)








0 கருத்துகள்:
கருத்துரையிடுக