ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

NLC-ஒப்பந்தத் தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தம் இன்று ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது

பணி நிரந்தரம், சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தம் இன்று ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த, ஒப்பந்தத் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். என்எல்சி ஒன்றாவது சுரங்கத்தின் முன்பு நாளை போராட்டம் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் என் எல் சி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ள தொழிலாளர்கள், எனவே அவரது தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என்று ஏற்கெனவே தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இனி, மண்டல தொழிலாளர் நல ஆணையர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் மட்டுமே பங்கேற்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 255 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

2 கருத்துகள்:

  1. Packers and Movers Delhi, Local Shifting Relocation and Top Movers Packers Delhi. Packers and Movers Delhi Household at www.Packers-and-Movers-Delhi.in
    http://packers-and-movers-delhi.in/
    http://packers-and-movers-delhi.in/packers-and-movers-chilla-delhi

    பதிலளிநீக்கு
  2. really a very nice blog i really appreciate all your efforts
    thank you so much for sharingths valuble information with all of us.
    The materials have a part to play however then thoughts are the most noteworthy thing that should be executed in most select and perfect way. We have set of experts Packers and Movers in Pune who could take the assignment in exhaustive way. The thoughts actually are a noteworthy plinth that holds the base of our organizatio
    http://thebusinessplace.in/

    பதிலளிநீக்கு