ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் உள்ள எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தை 2-வது நாளாக இன்றும் தொடர்கின்றனர்.


கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் உள்ள எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள், நேற்று தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தை 2-வது நாளாக இன்றும் தொடர்கின்றனர்.

தங்கள் கோரிக்கையான, அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் மற்றும் அக விலைப்படிக்கு ஒப்புதல் கிடைக்கும் வரை உண்ணாவிரதத்தை தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களின் இந்தப் போராட்டத்தால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது தங்களது நோக்கமில்லை என போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தான் போராட்டம் தொடருமா அல்லது கைவிடப்படுமா என்பது தெரியவரும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக