வெள்ளி, 27 ஏப்ரல், 2012

ஜிமெயில் உபயோகிப்பவரா நீங்கள்? - இதோ ஒரு நற்செய்தி!


கூகுளின் ஜிமெயில் உபயோகிப்பவரா நீங்கள். ஒரு நல்ல செய்தி உங்களுக்கு.
ஜிமெயில் கணக்கின் கொள்ளளவை 10GB யாக உயர்த்தியிருக்கிறது கூகுள். அதுமட்டுமில்லாமல், கடந்த 24 ஏப்ரலிலிருந்து கூகுள் டிரைவ் எனப்படும் மேகக்கணினி (Cloud) சேவையையும் கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கிறது. தேவையான ஆவணங்களை; படங்களை சேமித்துவைக்கவும், உறுப்பினர்கள் தமக்கிடையே பகிர்ந்துகொள்ளவும் இந்த மேகக் கணினி (Cloud Computing) உதவியாக அமையும்.

கடந்த 2004 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிமெயில் முதலில் 1GB கொள்ளளவே கொண்டிருந்தது. பின்னர் அது 7.5GB கொள்ளளவாக உயர்த்தப்பட்டது. தற்போது 10GB என்ற கொள்ளளவை அளிக்கிறது. இச்செய்தியை கூகுள் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

யாஹூ, AOL நிறுவனங்கள் வரையற்ற கொள்ளளவை அளிப்பதோடு ஒப்புநோக்கின், இந்த 2.5GB கூடுதல் சேமிப்பகத்தை ஜிமெயில் தருவதொன்றும் பெரிய விதயமில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் பெருவளர்ச்சி அடைந்துவரும் சூழலில் ஜிமெயில் அளிக்கும் இந்த இலவச கூடுதல் கொள்ளளவு குறிப்பிடப்படவேண்டியதாகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக