
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகள் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத அடிப்படைத் தேர்வுகளாகும். சமீபத்தில், பிளஸ்-2 தேர்வு தொடங்கி முடிந்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு…
இந்த வருடத்துக்கான எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 4-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி, 23-ந் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை மொத்தம் 12 லட்சத்து 44 ஆயிரத்து, 799 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில், 11 லட்சத்து 44 ஆயிரத்து 232 பேர் பள்ளிக்கூடங்களில் இருந்து எழுதுகிறார்கள். தனித்தேர்வர்களாக, புதிய பாட முறையில் 13 ஆயிரத்து 176 மாணவர்களும், 6393 மாணவிகளும் எழுதுகிறார்கள்.
பறக்கும் படைகள்
பழைய பாடத்திட்டத்தில் 81 ஆயிரத்து 28 பேர் எழுதுகிறார்கள். மொத்தம் 3 ஆயிரத்து 33 தேர்வு மையங்கள் அமைக்கபட்டுள்ளன. மாணவர்கள், காப்பி அடிப்பதைத்தடுக்கவும், கண்காணிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக்கல்வி அதிகாரி தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 4500 பேர் இந்தப்பணியில் ஈடுபடுகிறார்கள்.
இவர்கள் தவிர மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், சப்-கலெக்டர்கள் ஆகியோரும் அந்தந்த மாவட்டங்களில் தேர்வுமையங்களைப்பார்வையிடுவார்கள். மேலும், கல்வித்துறை இணை இயக்குநர்களும், ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாமிட்டு, தேர்வுப்பணிகளை மேற்கொள்கிறார்கள்.
4-ந் தேதி பரீட்சை
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு 4-ந் தேதி (புதன்கிழமை) தமிழ் முதல் தாளுடன் தொடங்குகிறது. 23-ந் தேதி சமூக அறிவியலுடன் முடிகிறது.
தினசரி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 12.45 மணிக்கு முடிகிறது. இதில், முதல் 15 நிமிடம் வினாத்தாள் வாசிக்கவும், தேர்வு பதிவு எண் எழுதவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணை
4-ந் தேதி-தமிழ் முதல் தாள்
9-ந் தேதி-தமிழ் இரண்டாம் தாள்.
11-ந் தேதி-ஆங்கிலம் முதல் தாள்.
12-ந் தேதி-ஆங்கிலம் இரண்டாம் தாள்.
16-ந் தேதி-கணிதம்.
19-ந் தேதி-அறிவியல்.
23-ந் தேதி-சமூக அறிவியல்.
மெட்ரிக்குலேஷன்
4-ந் தேதி-தமிழ் முதல் தாள்.
9-ந் தேதி-தமிழ் இரண்டாம் தாள்.
10-ந் தேதி-ஆங்கிலம் முதல் தாள்.
11-ந் தேதி-ஆங்கிலம் இரண்டாம் தாள்.
12-ந் தேதி-கணிதம் முதல் தாள்.
16-ந் தேதி-கணிதம் இரண்டாம் தாள்.
17-ந் தேதி-அறிவியல் முதல் தாள்.
18-ந் தேதி-அறிவியல் இரண்டாம் தாள்.
19-ந் தேதி-வரலாறு மற்றும் சிவிக்ஸ்.
20-ந் தேதி-புவியியல் மற்றும் பொருளாதாரம்.
ஆங்கிலோ இந்தியன்
ஏப்ரல் 4-ந் தேதி-மொழித்தாள்.
9-ந் தேதி-ஆங்கிலம் முதல் தாள்.
10-ந் தேதி-ஆங்கிலம் இரண்டாம் தாள்.
11-ந் தேதி-கணிதம் முதல் தாள்.
12-ந் தேதி-கணிதம் இரண்டாம் தாள்.
16-ந் தேதி-அறிவியல் முதல் தாள்.
17-ந் தேதி-அறிவியல் இரண்டாம் தாள்
18-ந் தேதி-வரலாறு மற்றும் சிவிக்ஸ்.
19-ந் தேதி-புவியியல்.
ஓ.எஸ்.எல்.சி.
ஏப்ரல் 4-ந் தேதி-தமிழ் முதல் தாள்.
9-ந் தேதி-முதன்மை மொழிப்பாடம் (சமஸ்கிருதம், அரபிக்) முதல் தாள்.
10-ந் தேதி-முதன்மை மொழிப்பாடம்(சமஸ்கிருதம், அரபிக்) இரண்டாம் தாள்.
11-ந் தேதி-ஆங்கிலம் முதல் தாள்.
12-ந் தேதி-ஆங்கிலம் இரண்டாம் தாள்.
16-ந் தேதி-கணிதம்.
17-ந் தேதி சிறப்பு (சமஸ்கிருதம், அரபிக்) மொழித்தாள்-3.
19-ந் தேதி-அறிவியல்.
.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக