செவ்வாய், 3 ஏப்ரல், 2012

பன்றிக்காய்ச்சல் நோய் எப்படி ஏற்படுகிறது?… இதன் அறிகுறிகள் என்னென்ன?… நோய் தடுப்பு முறைகள் என்னென்ன?

பன்றிக் காய்ச்சல் என்பது A – H1N1 என்றழைக்கப்படும் புதிய வகையான இன்ஃபுளூன்சா வைரஸை வகையைச் சேர்ந்ததாகும். இந்த வைரஸ் முதன்முதலில் 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இன்ஃபுளூன்சா வைரஸ் ஸ்வைன்புளூ வைரசுடன் ஒத்துப் போகிறது. ஸ்வைன்புளு வைரஸ் பன்றிகளிடம் இருந்து பரவுவதை வடஅமெரிக்காவில் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். கொள்ளை நோய் பட்டியலில் உள்ள ஸ்வைன், எவியன் வரிசையில் இன்புளூன்சாவும் இடம் பெற்றுள்ளது. பன்றிகளிடம் இருந்தே மனிதர்களுக்கு இந்நோய் பரவுகிறது. பிறகு ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு இந்நோய் சுலபமாக பரவுகிறது. காய்ச்சல், இருமல், தொண்டை அழற்சி, தலைவலி, தசைநார் வலி, களைப்பு, பலவீனம், தொண்டைப்புண், பசியின்மை ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும். சில நேரம் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியும் ஏற்படும். இந்த அறிகுறிகளுடன் மூச்சுவிடுவதில் சிரமம், தொடர்ச்சியாக வாந்தி, நீலம் மற்றும் பழுப்பு நிறத்தில் உடல் தோல் வெளிறி காணப்பட்டால் மருத்துவரை தாமதிக்காமல் சந்திக்க வேண்டும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர் மற்றவர்களிடம் இருந்து தனியாக பிரிந்து இருப்பதுதான் இந்நோய் பரவாமல் தடுக்க முதல் வழி. இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் போது கைக்குட்டை அல்லது டிஸ்யூ காகிதத்தை வைத்து வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்வது, நோயாளி பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். பொதுவாக கை, கால்களை கிருமி நாசினிகளை கொண்டு கழுவ வேண்டும். கை, கால்களை கழுவ சுடுநீரும் பயன்படுத்தலாம். பொதுஇடங்களுக்கு செல்லும் போது முகமூடி அணிந்து கொள்ளலாம். கண், மூக்கு, வாய் ஆகிய உறுப்புகளை தொடக்கூடாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக