செவ்வாய், 3 ஏப்ரல், 2012

உ.பி : தலைமைச்செயலாளராக ஜாவீத் உஸ்மானி; அட்டர்னி ஜெனரலாக ஜபர் யாப் ஜீலானி நியமனம்!

உத்தர பிரதேசத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட சமாஜ்வாடி கட்சியின் அரசு, தனது வெற்றிக்கு முழு முதல் காரணம் முஸ்லிம்கள் தான்,என ஊரறிய உரக்க சொன்னதுடன், பின் தங்கிய முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்ற முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவது, ஆறுதல் அளிக்கிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள உ.பி. அரசு, அரசின் தலைமைச் செயலாளராக, ஜாவீத் உஸ்மானி என்ற மூத்த IAS அதிகாரியை நியமித்துள்ளது. தற்போது, உ.பி. அரசின் அட்டர்னி ஜெனரலாக, பாபர் மசூதி வழக்கை நடத்தி வரும், சட்ட நிபுணர் ஜபர் யாப் ஜீலானியை நியமித்துள்ளது. இதற்கு அந்த மாநில பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாபர் மசூதியை முன்னின்று இடித்து தரை மட்டமாக்கிய அத்வானி, இந்த நாட்டின் உள்துறை அமைச்சர் ஆக முடியுமென்றால், மசூதி இடிப்பில் முழுமையாக பங்கெடுத்துக் கொண்ட, முரளி மனோகர் ஜோஷி, அகழ்வாராய்ச்சித்துறைக்கு அமைச்சர் ஆக முடியுமென்றால், நீதிக்காக வாதாடிய வழக்கறிஞர், தகுதி திறமை அடிப்படையில் அட்டர்னி ஜெனரல் ஆகக்கூடாதா? சங்க பரிவார கும்பல், சதி வேலை செய்வோருக்கு சன்மானமானமாக, கடந்த காலங்களில் கொடுத்த பதவிகளை பட்டியலிட்டால், பக்கங்கள் போதாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக