ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.


இதன்படி, 2 மாதங்களுக்கு 100 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய் 10 காசுகள் கட்டணமாக வசூலிக்கப்படும். 2 மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 1 ரூபாய் 80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு இரு பிரிவுகளாக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் 200 யூனிட்டுகளுக்கு 3 ரூபாயும், எஞ்சிய யூனிட்டுகளுக்கு 3 ரூபாய் 50 காசுகளும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் 200 யூனிட்டுகளுக்கு 3 ரூபாயும், 201-ல் இருந்து 500 யூனிட் வரை 4 ரூபாயும், அதற்கு மேல் 5 ரூபாய் 75 காசுகளும் மின்சார கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிசைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக