கணினி மயமாக்கப்பட்ட இப் புதிய கட்டண முறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் படி விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் குறிப்பிட்ட வழியாகத்தான் வர வேண்டும். இதற்காக ஆங்காங்கே சுங்க சாவடியில் உள்ளது போன்று கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வாகன எண், நேரம் ஆகியவற்றைக் குறிக்கப்பட்டு கார்டு ஒன்று வழங்கப்படுகிறது. பின்பு பணி முடிந்து வெளியே செல்வதற்கு பன்னாட்டு முனைய பயணிகள் புறப்பாடு பகுதியில் கேட் அமைக்கப்பட்டுள்ளது. 5 நிமிடம் வரை இலவசமாகவும், அதற்கு மேல் சிறிய ரகக் கார்களுக்கு 60 ரூபாயும், சொகுசுக் கார்களுக்கு 70 ரூபாயும் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிமியம் கார் பார்க்கிங் கட்டணம் 120 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் வேன்களுக்கு 225 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள் அனைத்தும் நான்கு மணி நேரத்திற்கு மட்டுமே பொருந்தும். இந்த புதிய முறையின் மூலம் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களின் பதிவு எண்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக