ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

செல்ஃபோன், இ மெயில் போன்ற நவீன தொழில் நுட்பங்கள் வருகையால் முக்கியத்துவத்தை இழந்து வரும் தபால் துறை இப்போது வேறு பல வழிகளிலும் தன் சேவையை விரிவாக்க தொடங்கியுள்ளது.

வங்கிகளை போல் தபால் அலுவலகங்களும் ஏடிஎம் சேவை தர உள்ளன. முதற்கட்டமாக, தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஆயிரம் ஏடி.எம்.,களை சோதனை ரீதியில் படிப்படியாக திறக்க திட்டமிட்டுள்ளது. இத்தகவலை வெளியிட்ட தபால் துறை செயலாளர் மஞ்சுளா பராசர், இதற்கான நடவடிக்கைகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்றும் தெரிவித்தார். இதற்கிடையில் கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்தவும் நிதிச்சேவைகளை ஒருங்கிணைக்கவும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்பை தபால் துறை நாடியுள்ளது. மற்ற நவீனமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு டிசிஎஸ், சிஃபி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் தபால் துறை பெற உள்ளது. நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக நாட்டிலுள்ள ஒரு லட்சத்து 55 ஆயிரம் தபால் அலுவலகங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்க தபால் துறை திட்டமிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக