வெள்ளி, 20 ஏப்ரல், 2012

ஆதாமின் பாலம் (adam's bridge) எனும் ராமர் பாலம் தேசிய சின்னம் இல்லை - மத்திய அரசு


ஆதாமின் பாலம்(adam's bridge)எனும் ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப் போவதில்லை என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தையொட்டி ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் ராமர் பாலத்தை ஆய்வு செய்ய ஆர்.கே. பச்சவுரி என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். கடந்த 29-ந்தேதி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் கூடுதல் பொது வழக்குரைஞர் ஹரன் ராவல்
"ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக நிபுணர்களுடன் அரசு ஆலோசித்து வருகிறது. எனவே கால அவகாசம் அளிக்க வேண்டும்" என்று கேட்டிருந்தார்.

அவருடைய கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் 2 வார கால அவகாசம் அளித்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பில் பதிவு செய்யப்பட்ட பதில் மனுவில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

பின்னர் இவ்வழக்கு விசாரணை ஆகஸ்டு 3-வது வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக