வெள்ளி, 20 ஏப்ரல், 2012

கடலூரில் அனுமதி இல்லாமல் செம்மண் ஏற்றிச் சென்ற 9 லாரிகள் பறிமுதல்

கடலூரில் அனுமதி இல்லாமல் செம்மண் ஏற்றிச் சென்ற 9 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கேப்பர் மலையில் இருந்து அனுமதி இல்லாமல் செம்மண்ணை அளவுக்கு அதிகமாக லாரிகள் மூலம் எடுத்து செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு முழுவதும் கடலூர் - சிதம்பரம் சாலையில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் முறையான ஆவணம் இல்லாமல் செம்மண் ஏற்றிச் சென்ற 9 லாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல் நேற்று முந்தினம் இரவு நடத்தப்பட்ட சோதனையில் 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக