
அமுதவல்லியின் கோரிக்கை
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது அன்றைய கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி கோரிக்கை வைக்கையில், `தற்போதுள்ள கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆங்கிலேயர் ஆட்சி கால கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மேலும் மாவட்ட அளவிலான அலுவலகங்கள் பல தனியார் கட்டிடங்களில் இயங்கி வருகிறது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலகமும் தனியாக ஒரு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதெல்லாம் ஒருங்கிணைந்த கட்டிடத்தில் இருந்தால் நிர்வாகத்துக்கு வசதியாக இருக்கும். எனவே கலெக்டர் அலுவலகம் மற்றும் வெளியில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட அலுவலக வளாகம் கட்டித்தர வேண்டும் என்றார். அவரது கோரிக்கையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டு அப்போதே அறிவிப்பு வெளியிட்டார்.
ரூ.25 கோடி ஒதுக்கீடு
இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி ஒருங்கிணைந்த பெருந்திட்ட அலுவலக வளாகம் கட்ட முதல் கட்டமாக 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 6 தளங்களுடன் 11 ஆயிரத்து 4 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக ஒருங்கிணைந்த பெருந்திட்ட அலுவலக வளாகம் அமைய உள்ளது.
தற்போதைய கலெக்டர் அலுவலக கட்டிடமானது 100 ஆண்டுகளை கடந்த கட்டிடமானதால் புராதன சின்னமாக பராமரிக்கப்பட உள்ளது. எனவே அதை இடிக்க முடியாது என்பதால் கலெக்டர் அலுவலக வளாத்தில் உள்ள கரூவூலம் மற்றும் அதையொட்டி உள்ள மழைநீர் சேகரிப்பு குளம் அமைந்துள்ள இடத்தில் புதிய கலெக்டர் அலுவலகத்தை கட்ட முந்தைய கலெக்டர் அமுதவல்லி திட்டமிட்டு இருந்தார். இதற்காக பொதுப்பணித்துறையினர் திட்டமதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக