PREPAID செல்ஃபோன் பயன்படுத்துவோர், இனி இதற்கான ரீசார்ஜ் கூப்பன்கள் வாங்கும்போதும், இ ரீசார்ஜ் செய்யும்போதும் ஏற்கனவே செலுத்தி வந்த செயல்முறை கட்டணமான 2 ரூபாய்க்கு பதிலாக, இனி 3 ரூபாய் செலுத்த வேண்டி வரும். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. நடைமுறை செலவினங்கள் உயர்வால், செயல்முறைக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிக்குமாறு செல்ஃபோன் நிறுவனங்களின் சங்கம் பல மாத...ங்களாகவே டிராயிடம் முறையிட்டு வந்தது. இதன் அடிப்படையில் டிராய் இந்த முடிவை அறிவித்துள்ளது. எனினும், ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு 20 ரூபாய்க்கு கீழான ரீசார்ஜ்களுக்கு பழைய கட்டணமே தொடரும் எனவும் டிராய் அறிவித்துள்ளது. அதோடு, பல செல்ஃபோன் நிறுவனங்கள் 20 ரூபாய்க்கும் கீழாக ரீசார்ஜ் செய்வதில்லை என்ற புகார் டிராய்க்கு வந்துள்ளது. இதையடுத்து குறைந்த பட்சம் 10 ரூபாய் அளவிலான ரீசார்ஜ் கூப்பன்களை அனைத்து செல்ஃபோன் நிறுவனங்களும் வழங்க வேண்டும் என்றும் டிராய் தனது உத்தரவில் கூறியுள்ளது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக