ஒடிஷாவின் வீலர் தீவில் இருந்து இன்று காலை 8 மணியளவில் ஏவப்பட்ட அக்னி – 5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக இருந்தது என பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் வல்லமை படைத்த அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக நேற்று நடத்தப்படுவதாக இருந்த அக்னி-5 ஏவுகணைச் சோதனை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 8.05 மணியளவில் வீலர் தீவில் உள்ள ராணுவ ஏவுதளத்தில் இருந்து அக்னி -5 ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. காலை நேரச் சூரியக் கதிர்களுக்கு மத்தியில் சீறிச் சென்ற இந்த ஏவுகணை, சுமார் 20 நிமிடத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள இலக்கை வெற்றிகரமாக சென்றடைந்ததாக ராணுவத்தின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த ஏவுகணைச் சோதனை வெற்றி பெற்றதன் மூலம், ஏவுகணைச் சோதனை தொழில்நுட்பத்தில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவது உறுதியாகியுள்ளது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக