ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

பஹ்ரைனில் ஃபார்முலா ஒன் கார்பந்தயம் இன்று நடைபெற உள்ளது.


பஹ்ரைன் சர்வதேச ஓடுதளத்தில் இன்று மாலை, 57 சுற்றுகளாக நடைபெற உள்ள இந்த பந்தயத்தில், நடப்பு சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல் முதல் இடத்தில் இருந்து காரை இயக்குகிறார். நேற்று நடைபெற்ற தகுதி சுற்று பந்தயத்தில் RED BULL அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல் ஒரு மணி நேரம் 32 நிமிடம் 4 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். MCLAREN அணி வீரர் LEWIS HAMILTON இரண்டாவது இடத்தையும், ரெட் புல் அணியின் மற்றொரு வீரர் MARK WEBBER மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். HRT அணிக்காக காரை இயக்கும் தமிழகத்தை சேர்ந்த நரேன் கார்த்திகேயனுக்கு 24-வது இடமே கிடைத்தது. FORCE INDIA அணி வீரர்கள் PAUL DI RESTA 10-வது இடத்தையும், NICO HUELKENBERG 13-வது இடத்தையும் பிடித்தனர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக