புதன், 21 மார்ச், 2012

வினோதமான கட்டிடம்

பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வினோதமான கட்டிடம்

அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதியில் அமைந்துள்ள மிச்சூரி மாகாணத்தில் உள்ள பிரான்சான் என்ற நகரில் பார்வையாளர்களை அதிர்ச்சியிலும்,ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையில் ஒரு பிரமாண்ட கட்டிடத்தை அமைத்து இருக்கிறார்கள்.

அது என்னவென்றால் இந்த கட்டிடத்தின் தோற்றம் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட கட்டிடம் போல வடிவமைத்து இருப்பது தான். இந்த கட்டிடத்திற்கு ”ரிபிலிங் பிலீவ் இட் ஆர் நாட்” என்றும் வித்தியாசமான பெயரும் வைத்திருக்கிறார்கள்.

இது சுமார் 40 அடி உயரமும், 1,200 அடி அகலமும் கொண்ட இந்த கட்டிடத்தை முதன் முறையாக இதை காண்பவர்கள் உண்மையிலேயே நிலநடுக்த்தில் சேதம் அடைந்தது என்றே நினைப்பார்கள்.

இதை பார்த்து ஆச்சரியம் அடைந்த சிலர் கூறுகையில்,இதை சற்று நின்று கவனியுங்கள் என பேனர் வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.மற்றொருவர் கூறும்போது,மனதை வசிகரித்த இந்த வினோத கட்டிட அமைப்பை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக