புதன், 21 மார்ச், 2012

கர்நாடகாவைத் தொடர்ந்து குஜராத்திலும் தொடரும் பா.ஜ.கவின் ஆபாசம்: 2 எம்.எல்.ஏக்கள் சிக்கினர்

 Gujarat-porn-scandal-295x200
வகுப்புவாத வெறி, இனப் படுகொலைகள், பாலியல் வெறி, கலவரங்கள், ஊழல், உட்கட்சிப் போர் என அனைத்திலும் சிறப்புற்று விளங்குகிறது சங்க்பரிவார கும்பல்.
இந்தியாவின் சாபக்கேடாக மாறியுள்ள சங்க்பரிவாரின் அரசியல் பிரிவான பா.ஜ.கவின் வெட்கங்கெட்ட ஆபாச கூத்துக்கள் தற்போது கர்நாடகாவை தொடர்ந்து குஜராத்திலும் அரங்கேறியுள்ளது.
அண்மையில் கர்நாடகா சட்டப்பேரவையில் நிகழ்ச்சிகள் நடக்கும் வேளையில் மொபைல் ஃபோனில் ஆபாசப் படங்களை பார்த்த சம்பவத்தில் பா.ஜ.க அரசின் 3 அமைச்சர்கள் சிக்கி தங்களது பதவியை ராஜினாமா செய்யும் சூழல் உருவானது. நாடு முழுவதும் இச்செய்தி பரவி அவமானப்பட்ட பிறகும் பா.ஜ.கவினர் பாடம் படித்ததாக தெரியவில்லை.
கர்நாடகாவில் மொபைல் ஃபோனில் ஆபாசம் படம் பார்த்த பா.ஜ.க உறுப்பினர்கள், குஜராத்திலோ டேப்லெட்டுக்களில் ஆபாசப் படங்களை சட்டப்பேரவைக்குள்ளே பார்த்து ரசித்துள்ளனர்.
உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் குஜராத் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஷங்கர் சவ்தரியும், ஜேதா தர்வாதும் டேப்லெட்டுக்கள் மூலமாக ஆபாசப் படங்களை பார்த்த காட்சியை பதிவுச் செய்துள்ளார். தொலைக்காட்சியொன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி இதுக்குறித்த குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. பா.ஜ.க எம்.எல்.ஏக்களான ஷங்கர் சவ்தரியும், ஜேதா தர்வாதும் சட்டப்பேரவையில் ஆபாசக் காட்சிகளை டேப்லெட்டில் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், பா.ஜ.க மாநில தலைவர் சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளார். அவரைக் கண்டவுடன் இரண்டு எம்.எல்.ஏக்களும் ஆபாசக் காட்சிகளை மாற்றிவிட்டு விவேகானந்தர் ஃபோட்டாவை ஸ்கீரினில் மாற்றியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக் குறித்து பதிலளித்துள்ள பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் காங்.கட்சி தங்களை அவமானப்படுத்த முயல்வதாக கூறியுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக