புதன், 19 ஆகஸ்ட், 2015

காவல்துறையினர் தாக்கியதாக மது எதிர்ப்பு மாணவி நந்தினி தந்தையுடன் உண்ணாவிரதம்!

திண்டுக்கல்: காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றபோது, தன்னையும், தனது தந்தையையும் தாக்கியதாகக் கூறி மதுவுக்கு எதிராக போராடி வரும் மாணவி திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.


வருகிற 25ஆம் தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, 
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் இன்று காலை 10 மணியளவில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் மாலை 6 மணிக்கு இருவரையும் காவல்துறையினர் விடுவித்தனர்.

இந்நிலையில், காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்த நந்தினி மற்றும் அவரது தந்தை காவல்நிலையத்தின் முன்பு திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றபோது, தனது தந்தையையும், தன்னையும் போலீசார் தாக்கியதால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாக நந்தினி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக