பரங்கிப்பேட்டை:கொடுவா மீன் வளர்ப்பு குறித்து அண்ணாமலை பல்கலைக்
கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய மாணவர்களுக்கு செயல் விளக்கம்
அளிக்கப்பட்டது.பரங்கிப்பேட்டையில் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தில் ஒரு
கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த கடலோர மாதிரி மீன் பண்ணை
அமைக்கப்பட்டது.
கடலோர மீனவர்களுக்கு பயிற்சி அளித்து மீன் வளர்ப்பில் ஈடுபடுத்தி, மீனவர்களை
கடல் மீன் பிடிப்பில் இருந்து மீன் வளர்ப்பிற்கு ஊக்குவிப்பது மற்றும்
மீனவர்களுக்கு சுய வேலை வாய்ப்பினை ஏற்படுத்த இப்பண்ணையில் முதல் கட்டமாக கொடுவா
மீன் வளர்க்கப்பட்டது.நேற்று பண்ணையில் வளர்க்கப்பட்ட கொடுவா மீன்கள் மீன்துறை துணை
இயக்குநர் செல்வன், தொழில் நுட்ப ஆலோசனைக்குழு உறுப்பினர் பேராசிரியர் சீனிவாசன்
ஆகியோர் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டது. மீன் வளர்ப்பு குறித்து
பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய
மாணவர்களுக்கு ராஜிவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் திட்ட மேலாளர்
பாண்டியராஜன் செயல் விளக்கமளித்தார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக