சனி, 8 ஆகஸ்ட், 2015

பரங்கிப்பேட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் & ஊர்வலம்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் பிளாஸ்டிக் கழிவு (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள் 2011-ஐ நடைமுறைபடுத்தியும் 40 மைக்ரான் அளவிற்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வதையும், இருப்பு வைப்பதையும் தடை செய்ய வேண்டும்.பொது மக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாத வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி "பிளாஸ்டிக்கிலிருந்து விடுதலை' எனும் தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் ஊர்வலம் நடந்தது.

பரங்கிப்பேட்டைபேரூராட்சி மன்றம் சார்பில் நடந்த விழிப்புணர்வு கூட்டம் மற்றும் ஊர்வலத்திற்கு தலைவர் முகமதுயூனுஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் நடராஜன், செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பரங்கிப்பேட்டை பேரூராட்சியை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்ற பொது மக்கள் ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில் கவுன்சிலர்கள் அருள்முருகன், காஜாகமால், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜீவானந்தம், கண்ணதாசன், சுகாதார ஆய்வாளர் எட்வின்ராஜ், துப்புரவு ஆய்வாளர் ரவிசந்திரன் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது பிளாஸ்டிக்கிலிருந்து விடுதலை' எனும் தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக