செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

பல்டியடித்த மத்திய அரசு.. 857 ஆபாச இணையதளங்களுக்கு மீண்டும் அனுமதி

டெல்லி :தடை செய்த ஆபாச இணையதளங்களை மீண்டும் செயல்பட பச்சைக்கொடி காண்பித்துள்ளது. அதேநேரம், குழந்தைகளின் ஆபாச படங்கள் இருந்தால் மட்டும் அந்த வெப்சைட்டுகளை முடக்குமாறு இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆபாச வெப்சைட்டுகள் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது.இந்நிலையில், ஆபாச வெப்சைட்டுகளை முடக்க உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை இன்னும் நடந்துவருகிறது.

கோர்ட்டில் வழக்கு நிலுவையிலுள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், திடீரென ஆபாச வெப்சைட்டுகளை தடை செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. பிரபலமாக உள்ள சுமார் 857 ஆபாச இணையதளங்களை முடக்க இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு கடந்த சனிக்கிழமை தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டது.ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 857 ஆபாச வெப்சைட்டுகளையும் தடை செய்துவிட்டன.

இதனிடையே, ஆபாச வெப்சைட்டுகளை முடக்குவது தொர்பாக ஆபாச படம் விருபிகளின் எதிர்ப்பு விமர்சனங்கள் எழுந்தன.  இதையெல்லாம் கவனித்த மத்திய அரசு, நமக்கேன் வம்பு என்ற ரீதியில் ஒதுங்கிக்கொண்டுள்ளது. 857 வெப்சைட்டுகளின் முடக்கத்தையும் நீக்குமாறு, இணையதள சேவை நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுவிட்டது
தகவல் ஒளிபரப்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இதுபற்றி ஆலோசனை நடத்தியுள்ளார். அதன்பிறகே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக