கடலூர்:சிதம்பரம் தாலுகாவில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என்று குறைகேட்புக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக்கூட்டம் கலெக்டர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் கடலூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளும், விவசாயிகளும் பங்கேற்றனர். கூட்ட விவரம் வருமாறு:–
குஞ்சிதபாதம்:–சிதம்பரம் தாலுகாவில் கீரப்பாளையம் வட்டாரத்துக்குட்பட்ட கிளியனூர், நெடுஞ்சேரி, பேரூர், வடக்குப்பாளையம், பூதங்குடி ஆகிய பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான முயற்சிகளில் ஓ.என்.ஜி.சி.நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மீத்தேன் எரிவாயு எடுத்தால் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படும் எனவே அத்திட்டத்தை கைவிட வேண்டும். சிதம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் பாம்புக்கடிக்கு விஷமுறிவு மருந்து இல்லாததால், பாம்புக்கடிக்கு சிகிச்சை பெற வந்தவர்களை கடலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுகிறார்கள். இதனால் உயிரிழப்பு நேருவதால் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பாம்புக்கடிக்கான விஷமுறிவு மருந்துகளை வழங்க வேண்டும்.
நேரடி நெல்கொள்முதல்
அகரம் ஆலம்பாடி வேல்முருகன்:–சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கலை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். கிராமநிர்வாக அலுவலகங்களில் அடங்கலுக்கான படிவங்கள் இல்லை, அவற்றை விரைவாக வழங்க வேண்டும். விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மழைகாலங்களில் நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைவதால், கூடுதலாக தார்ப்பாய் வழங்க வேண்டும். விருத்தாசலம், சிதம்பரம் வட்டாரங்களில் குறுவை நெல் அறுவடை நடக்கிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால் அரசு நிர்ணயித்தவிலையை விட குறைந்த விலைக்கு நெல்லை வியாபாரிகள் கேட்கிறார்கள். எனவே நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி வட்டாரங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
கலெக்டர்:–முன்பு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கும் அதிகாரம் கலெக்டருக்கு இருந்தது. இப்போது நுகர்பொருள்வாணிபக்கழக நிர்வாக இயக்குனருக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே நுகர்பொருள்வாணிபக்கழக நிர்வாகஇயக்குனருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்.
சம்பா சாகுபடிக்கு தண்ணீர்
காவலாக்குறிச்சி முருகானந்தம்:–சேத்தியாத்தோப்பு பகுதிகளில் வட்டிக்கடைகளில் கூடுதல் வட்டி வசூலிக்கிறார்கள். எனவே வட்டிக்கடைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம்–கம்மாபுரம் ரோடு மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் அந்த ரோட்டின் இருபுறமும் கறுப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
ரவீந்திரன்:–கடந்த ஜனவரி மாதம் முதல் நடப்பு மாதம் வரை கர்நாடகா அரசு மேட்டூருக்கு 54.320 டி.எம்.சி.தண்ணீர் தந்திருக்க வேண்டும், ஆனால் 16 டி.எம்.சி.தண்ணீர்தான் வழங்கி உள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் குறுவைசாகுபடி பரப்பளவு 60 ஆயிரம் ஏக்கரில் இருந்து 30 ஆயிரம் ஏக்கராக குறைந்து விட்டது. மேட்டூரில் போதிய தண்ணீர் இல்லாததால், வருகிற சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே சம்பா சாகுபடிக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டும். மேட்டூரில் இருந்து கல்லணைக்கு வரும் தண்ணீரில் 10 சதவீதத்தை கடலூர் மாவட்டத்துக்கு வாங்கித்தர வேண்டும்.
நஷ்ட ஈடு
காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் பட்டா மாற்றம் செய்யக்கோரி விவசாயிகள் 957 மனுக்கள் கொடுத்தார்கள். அவர்களுக்கு இதுவரை பட்டா மாற்றம் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ருட்டி நகரத்தில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் திரிந்தால், அவற்றின் உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. காரைக்காலில் போக்குவரத்துக்குஇடையூறாக சாலைகளில் கால்நடைகள் திரிந்தால், உரிமையாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். நாகை மாவட்டத்தில் விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் கால்நடைகளை பட்டிகளில் அடைக்கிறார்கள். ஆனால் கடலூர் மாவட்டத்தில் பட்டிகள் இல்லை. எனவே பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் கால்நடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து நஷ்ட ஈடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீத்தேன் திட்டம்
மாதவன்:–சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த ஓ.என்.ஜி.சி. முயற்சிக்கிறதை கைவிட வேண்டும். இல்லையெனில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே அத்திட்டத்தை திரும்பப்பெற வேண்டும். திட்டக்குடி தாலுகா நெய்வாசலில் அரசு மணல்குவாரியில் 33 நிபந்தனைகளில் ஒன்று கூட அமலாக்கப்படவில்லை. குறிப்பாக இரவில் குவாரி இயங்கக்கூடாது என்ற நிபந்தனையை மீறி இரவிலும் மணல் அள்ளப்படுகிறது. ஒருநாளைக்கு 40 லாரிகளில் மணல் அள்ளியதாக கணக்குக்காட்டி விட்டு 100–க்கும் அதிகமான லாரிகளில் மணல் அள்ளுகிறார்கள். இந்த முறைகேட்டை தடுக்க மணல்குவாரிக்கு ‘சீல்’ வைக்க வேண்டும். நெய்வேலியில் என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். அதற்காக புதிதாக இன்கோசர்வ் சொசைட்டியை உருவாக்க வேண்டும். பரங்கிப்பேட்டை நவாப்பேட்டையில் அனுமதியின்றி இயங்கும் இறால் பண்ணைகளை தடை செய்ய வேண்டும். குறுவை சாகுபடி நெல்லை அடிமாட்டு விலைக்கு வியாபாரிகள் வாங்குகிறார்கள். எனவே குறுவைசாகுபடி பகுதிகளில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். கருவேப்பிலங்குறிச்சி வங்கியில் விவசாய கடனுக்காக நூறுநாள் திட்ட சம்பளத்தை பிடித்தம் செய்கிறார்கள். அதை கைவிட உத்தரவிட வேண்டும்
விவசாயி:–பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.
கலெக்டர்:–அதுதொடர்பாக வருகிற 29–ச்தேதி சிதம்பரத்தில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அந்தக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று கருத்துக்களை சொல்லலாம்.
இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக